யானையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது பாதி சொத்துக்களை எழுதிவைத்துள்ளார் “அக்தர் இமாம்”.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் தான் செல்லமாக வளர்க்கும் இரு யானைகளை வளர்த்து வருகிறார் மோதிக்கு 15 வயது, ராணிக்கு 20 வயது. பீகாரைச் சேர்ந்த , யானைகளுக்கு ஒரு இலாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வருகிறார், அவர் தனது 6.25 ஏக்கர் நிலத்தை யானைகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.
தனது குடும்பத்தார்கள் இறந்து யானைகளையும் கொன்று அதை விற்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.மேலும் தான் மறைந்த பிறகு யானையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது பாதி சொத்துக்களை யானையின் பாதுகாப்புக்காக எழுதிவைத்துள்ளார். அக்தர் இமாம் எழுதி வைத்துள்ள சொத்தின் மதிப்பு பல கோடிகள். ஆனால் அவர் தான் வளர்க்கும் யானைகளை பிள்ளைகளாக பார்க்கிறார்.
கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது இமாம் அக்தரின் இது யானைகளை காப்பாற்ற போராடும் போராட்டம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.