புதுடில்லி: டில்லியின் அனைத்து மாவட்டங்களும் மே 17ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக இருக்கும் என டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், ஊரடங்கினை மே 17ம் தேதி வரை நீட்டித்து, இந்த மண்டலங்களுக்கு ஏற்றவாறு சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்நிலையில், டில்லியின் அனைத்து மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலமாக இருக்கும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். டில்லியில் இதுவுரை 3,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 61 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 223 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது: டில்லியில் தற்போது, 49 பேர் ஐசியு.,விலும், 5 பேர் வென்டிலேட்டரிலும் உள்ளனர். டில்லியில் உள்ள 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும். சிவப்பு மண்டலம் என்பது 10க்கும் மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட பகுதியாக பார்க்கப்படுகிறது.அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் கிடைக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் திரும்புவது குறித்து மற்ற மாநிலங்களுடன் பேசி வருகிறோம். தேவைப்படும் அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close