நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பூனைகள் அமெரிக்காவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் செல்லப்பிராணிகளாக மாறியது, இது உலகெங்கிலும் பரவலாக பேசு பொருளாக மாறி வருகிறது, பூனைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்ற இந்த செய்தியை அமெரிக்க வேளாண் துறை மற்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்து உள்ளது .
பூனைகள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை. மேலும் லேசான அறிகுறிகளைக் காண்பித்தன.கொரோன வைரஸ் இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்வாப் சோதனையை ஒரு தனியார் ஆய்வகம் நடத்தியது பின்னர் தேசிய கால்நடை ஆய்வகத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
பூனைகளுக்கு சுவாச நோய்த்தொற்று மற்றும் அறிகுறிகளைக் காணப்பட்டது பின்னர், உரிமையாளர்கள் பூனைகளை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர், மேலும் உரிமையாளர்களில் ஒருவர் வைரஸ் இருப்பது ஒருத்தியாகி இருக்கிறது. முன்னதாக பெல்ஜியத்தில் ஒரு செல்ல பிராணிக்கும் , பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளது உறுதி ஆகியுள்ளது .
எதனை அடுத்து டெல்லியில் உள்ள மிருகக்காட்சிசாலையில் கிருமி நாசினி தெளிக்க இந்தியா அரசு முடிவு எடுத்து உள்ளது.