முகத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்கும் விஷயங்கள்…
எண்ணெய் சருமத்தினருக்கு இருக்கும் பெரிய கவலையை எண்ணெய்யை போக்குவதும் , கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அவர்களுக்கு தெரியாமலேயே எண்ணெய் அதிகம் சுரக்க அவர்களே காரணமாக இருக்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம். முகத்திற்கு ஹெவியான மேக்அப், அதிக பியூட்டி பொருட்களை அப்ளை செய்வதும் எண்ணெய் சுரக்க காரணமாக இருக்கும். எனவே கெமிக்கல்கள் அதிகம் நிறைந்த காஸ்மெடிக்ஸ் பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துகிறீர்கள் எனில் அதை தவறாமல் பயன்படுத்துங்கள். அதேபோல் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதன் மூலமும் எண்ணெய் சுரப்பதை தவிர்க்கலாம்.
அடிக்கடி முகம் கழுவுவதாலும் சருமம் எண்ணெய் சுரப்பதை அதிகரிக்கும். இதற்காக கிளென்சிங், ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது சருமத்தின் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும். மன அழுத்ததாலும் ஹார்மோன் சமநிலையின்மையால் எண்ணெய் அதிகம் சுரக்கும். பிசிஓஎஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும் எண்ணெய் சுரத்தல் அதிகமாக இருக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பது அவசியம். எனவே போதுமான நீர் அருந்தவில்லை என்றாலும் சருமம் எண்ணெய் சுரப்பதை அதிகரிக்கும்.