தகவல்கள்

புகைப்பிடிப்பவர்களை கொரோனா எளிதில் விடாது – காரணம் இது தான் !!

WHO வின் கருத்துப்படி, உலகம் முழுவதும் ஏற்படும் அதிக மரணத்திற்கு புகைப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பழக்கத்தால் ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து போகின்றனர். தற்போது கொரோனா விஷயத்திலும் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் இருக்கின்றனர். ஏனெனில் புகைப்பழக்கத்தால் ஏற்கனவே அவர்களது நுரையீரல் பாதிப்பு அடைந்திருக்கும். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அவர்கள் நிலைமை மோசமாகிவிடும்.

கொரோனா வைரஸ் முதலில் தன்னிடமுள்ள ACE2 புரத்தை வைத்துக்கொண்டு மனிதச் செல்லுக்குள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்துவிடுகிறது. இப்படி நுழையும்போது மனித செல்களில் உள்ள Memory cell அலாட்டாகி அவற்றை எதிர்ப்பதற்கு தயாராகிவிடும். இது சாதாரண மனிதனிடம் காணப்படும் நிகழ்வு. இதுவே புகைப்பிடிக்கும் நபராக இருக்கும்பட்சத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர், பெரும்பாலும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாசத் தடை நோய் (COPD) போன்ற கோளாறுகளால் அவதிப்பட்டு கொண்டிருப்பார். இவர்களைப் போன்று புகைப்பழக்கம் இல்லாமலும் சிலர் சுவாசப் பிரச்சனைகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் சுவாசக்குழாய்களில் இருக்கும் பாதைகள் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருக்கும் நேரத்தில் கொரோனா நோய்த்தொற்று இவரது செல்களை ஏமாற்றி நுரையீரலை மிக எளிதாக அடையலாம். ஏனெனில் இத்தகைய தன்மையுடைய நபர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதையில் பாதிப்புகள் இருக்கும். அதனால் பெரும்பாலும் நுரையீரல் செல்களில் காணப்படும் மெமரி செல்கள் உறங்கிகொண்டிருக்கும். பூட்டு இல்லாத வீடுபோல நுரையீரல் பாதிப்புள்ளவர்களின் நுரையீரலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ்கள் சுவாசத்தை தடைப்படுத்தும். அத்தகைய நிலைமைகளில் வென்டிலேட்டர்கள் அவசியமாகிறது.


United Kingdom பல்கலைக்கழகத்தின் செயலாளர் மாட் ஹான்காக் புகைப்பிடிப்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும கொரோனா நோய்த்தொற்றின்போது அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இவர்களிடம் பாக்டீரியா, நிமோனியா மற்றும் காசநோயின் விகிதம் அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2012 இல் மத்திய கிழக்கு பகுதிகளில் MERS வைரஸ் பரவியபோது புகைப்பிடிப்பவர்கள் அதிகம் இறக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கடுமையான அறிகுறிகளும் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்த விகிதம் கொரோனா வைரஸை பொறுத்தவரை குறைவாக இருந்தாலும் மற்றவர்களைவிட பாதிப்பு அதிகம் என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர்.

புகைப்பழக்கத்தால் சுகாதாரமற்ற முறையில் கண், வாய், மூக்கு போன்ற இடங்களுக்கு வைரஸை கடத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் புகைப்பிடிப்பவர்கள் 15 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் தொகையில் 5 இல் 1 பங்கு மக்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து புகைப்பிடிப்பவர்கள் அதிகம் பயப்பட தேவையில்லை எனவும் கருதுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் புகைப்பிடிப்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது பாதிப்புகளும் அதிகமாகிறது என்பதற்கான சான்றுகளும் தற்போது கிடைக்கின்றன.

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் குறைந்தது 10 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களில் 5 விழுக்காட்டு நபர்களுக்கு வென்டிலேட்டர் போன்ற தீவிரச் சிகிச்சை அவசியமாகிறது. இந்த 5 விழுக்காடும் இருதயநோய், சுவாசநோய் (புகைப்பழக்கம்), உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது புகைப்பழக்கம் உள்ளவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவாக விளங்கும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.