பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது
பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்கு ஹேக்கர்கள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் இடப்பட்ட ட்வீட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண சேகரிப்புக்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது.எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட விஷயமும் பதிவாகியிருந்தது. ட்விட்டர் நிறுவனம் உடனே தொடர்பான ட்விட்டுகளை நீக்கியது.
ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) ட்விட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கிற்கு (PMO India) ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.