கரூர்: கடந்த, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில் கோடைக்காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழம், ஒரு கிலோ, 150 ரூபாய் வரை விற்றது. நடப்பு மாதம், இரண்டாவது வாரம் முதல், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய துவங்கியது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் உற்பத்தி அதிகரித்தது. இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, திருவள்ளுவர் மைதானம் தற்காலிக சந்தை, காமராஜர் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்தது. நேற்று, ஒரு கிலோ, 50 முதல், 80 ரூபாய் வரை விற்றது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், ‘ எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மழைக்காலம் துவங்கியுள்ளதால், பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சை பழத்தின் விலையும் குறைந்து விட்டது’ என்றனர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close