நோய் தொற்று ஏற்பட்டுள்ள குடியிருப்பில் ரேஷன் கடைகள் இருப்பதால் பீதி..!!
சென்னை : நோய் தொற்று ஏற்பட்டுள்ள, அடுக்கு மாடி குடியிருப்பில், ரேஷன் கடைகள் செயல்படுவதால், ‘டோக்கன்’ பெற்றும், பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் பீதியில் உள்ளனர்.கோடம்பாக்கம், வன்னியர் தெருவில் உள்ள, தனியார் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ்தளத்தில், எச்.சி.071 மற்றும் எச்.சி.067 என்ற குறியீடு எண்களில், இரண்டு ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.இந்த கடைகளில், கோடம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர்.தற்போது, அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த குடியிருப்பு, தடை செய்யப்பட்ட பகுதி என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இன்று முதல் பொருட்கள் வாங்குவதற்கும், டோக்கன் வினியோகிக்கப்பட்டு உள்ளது.ரேஷன் கடைகள் உள்ள தொற்று ஏற்பட்டுள்ள குடியிருப்பில், பொருட்கள் வாங்க செல்ல முடியாமல், மக்கள் பீதியில் உள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:கோடம்பாக்கத்தில், நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, ரேஷன் கடைகள் செயல்படும் இடத்தில், தொற்று இருப்பதால், இன்னும் பலருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்