தகவல்கள்
நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்- தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…
நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தலா 1 மணி நேரம் வீதம் தினமும் 4 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு நாளும், மாணவர்களுக்கு பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 7 ஆயிரத்து 420 மாணவர்கள் இப்பயிற்சியினை பெற, பதிவு செய்துள்ளனர்.