இந்தியா

எல்லையில் பதற்றம்! – முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு…

லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்னர் , லடாக் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும் படியும், முப்படைகளும் தயார் நிலையில் இருக்கும் படியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 பேர் உயிரிழந்தனா். இந்த மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.