துருவ நட்சத்திரம் அப்டேட் சொல்லும் “கெளதம் வாசுதேவ் மேனன்”!
துருவ நட்சத்திரம் படத்திற்கான இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.
சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் அந்தப் படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர்கள் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சில நிதிச் சிக்கல்களால் பட வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
ஆனால் துருவ நட்சத்திரம் படம் தற்போது வெளியாவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளது. படத்திற்கான இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.துருவ நட்சத்திரம் படம் இந்த ஆண்டே வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலில் நான் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் வேலைகளை முடிப்பேன். அதே நேரம் துருவ நட்சத்திரம் படத்திற்கான பணிகளும் நடக்கும். துருவ நட்சத்திரம் படத்திற்கான இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது, ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கரோனா குழப்பங்கள் அனைத்தும் முடிந்தவுடன் டப்பிங் பணிகளில் ஈடுபடுவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். இது பெரிய படம், அனைத்து சிக்கல்களும் தீர்ந்து சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.விக்ரமுடன் இணைந்து ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடத்துள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.