திடீரென சரிந்த தங்கம் விலை..!

தங்கத்தின் விலை தொடர்ந்து இரு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு சவரனுக்கு 448 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் 39,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 448 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4972 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 56 ரூபாய் குறைந்து 4916 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று 76.50 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், 1 ரூபாய் 60 பைசா குறைந்து இன்று 74.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நடப்பு வாரம் விலை உயர்வுடனே தொடங்கியது. இந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது. நிலையான விலை இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருப்பதால் தற்போது பொது மக்களும் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.


