தமிழக முதல்வர் பழனிசாமி “மிலாடி நபி” வாழ்த்து தெரிவித்துள்ளார்…
இஸ்லாமியர்கள் மிலாடி நபி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். உலகில் அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் தழைக்கட்டும் என வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த மீலாடி நபி நல்வாழ்த்துக்கள். மேலும், இந்நன்னாளில் நபிகள் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்..
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “முகமது நபி அவர்களின் பிறந்த நாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முகமது நபி அவர்கள், அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அளித்து உலகத்தை மனித நேயத்தின் பாதையில் கொண்டு சென்றார்” என்று தெரிவித்துள்ளார். புனித குரானில் சொல்லப்பட்ட நபிகள் நாயகத்தின் போதனைகள்படி நாம் அனைவரும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் பாடுபடுவோம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
இறையைத் தவிர வேறு எதனையும், எவரையும் வணங்குதல்கூடாது என்றும்; இறைக்கு உருவமில்லை என்பதுடன் இணையுமில்லை என்றும் போதித்தவர். இது அதிகாரமுள்ள மனிதர்களிடையே கர்வத்தை வளர்த்து தன்னையே இணை வைக்கவும் வழிவகுத்துவிடும் என்பதைப் புலப்படுத்தியவர். மாந்தரின் ஆணவத்தைத் தகர்க்க இறைநம்பிக்கையால் மட்டுமே இயலும் என்று தெளிவுப்படுத்தியவர். இவ்வாறு மனிதகுலத்தை அகந்தையில்லா நற்பண்புகளுடன் வளர்த்தெடுக்கும் வழிவகையினை வழங்கியவர். இத்தகைய மகானின் பிறந்தநாளை சமத்துவம், சகோதரத்துவம் போற்றும் நாளாகக் கொண்டாடுவோம்! என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.