‘தண்ணி குடி’ எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடே இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. எனவே சரியான முறையில் தண்ணீர் பருகினால் நாம் பல நன்மைகளை அடையாளம்.நம் உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் காண்போம்.
தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்??
- காலையில் எழுந்தவுடன் முதலில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். (உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது)
- உங்கள் உணவுக்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் சாப்பிடுங்கள். (செரிமானத்திற்கு உதவுகிறது)
- குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். (உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க உதவுகிறது)
- படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். (பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தவிர்க்க உதவுகிறது)
- உடற்பயிற்சிகளுக்கு முன்னும் பின்னும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
- பிளாஸ்டிக் பாட்டில் மூலமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
- ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். ( இரத்த சோடியம் அளவு குறைய வாய்ப்பு உள்ளது )
- நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ( நீரிழப்பு எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது )
உங்கள் உடல் தண்ணீரை திறம்பட உறிஞ்ச உதவும் வழிகள் :
- குளிர்ந்த நீருக்கு பதிலாக வெது வெதுப்பான அல்லது சூடான நீரைக் குடிக்கவும்.
- இந்த பொருட்கள் தண்ணீர் உடலில் விரைவாக சேர்ந்து செயல் பட உதவுகிறது.
- உங்கள் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்
- சியா விதைகளை சில மணி நேரம் ஊறவைத்து அவற்றை உங்கள் தண்ணீரில் சேர்க்கலாம்
- உங்கள் தண்ணீரில் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
- அதிக நீர் சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவும்.
இவ்வாறு தண்ணீர் குடிப்பது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் போது இனியும் தண்ணீர் குடிப்பதை குறைக்காமல் .இந்த கோடையில் தண்ணீரை சரியாக பருகி நலமுடன் இருப்போம்.