பலர் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாம் தயாராகி வருகிறோம்.
நம் நாட்டில், வதந்திகள் விரைவாக பரவுகின்றன. பலர் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்பினர். எனவே, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. சிலர் ஏற்கனவே இதை தொடங்கிவிட்டனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.