ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன Go Back Stalin ஹேஷ்டேக்
சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்வதில் தமிழ்நாட்டுக்காரர்களை மிஞ்ச முடியாது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்கள் அதில் நிபுணர்கள். நேற்றைய தினம் இந்திய அளவில் தமிழக வாசம் தெரிந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணிப்பதை உணர்த்தும் விதமாக மதுரை சென்ற ஸ்டாலினை Go Back Stalin என்ற வாசகம் ட்ரெண்டானது.அதேசமயம், ஸ்டாலின் உடன் தமிழ்நாடே இருப்பதாகவும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.
முத்துராமலிங்க தேவரின் 113-ஆவது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் காலையில் மரியாதை செலுத்தினர். அண்மையில், மனுநீதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறிய கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறி கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பல்வேறு தரப்பினர் பதிவிட்டனர். இதனால் Go Back Stalin இந்திய அளவில் டிரெண்டானது. இது குறித்து தெரிவித்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர், பாஜகவினர் போலி கணக்குகள் மூலம் ட்ரெண்ட் செய்வதாக குற்றம் சாட்டினர். போட்டியாக, ஸ்டாலின் ஆதரவாளர்கள் TN with MK Stalin என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.