இந்தியா
செப்.30-இல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், செப்டம்பர் 30ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருகிற 30-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 30-ஆம் தேதி அன்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கவுள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.