சினிமா

சூரரைப்போற்று இந்தியில் தயாராகிறது – ஜி.ஆர்.கோபிநாத் தகவல்

ஏர் டெக்கன் என்ற விமான நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறே தமிழில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. இப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. கோபிநாத் எழுதிய simply fly என்ற புத்தகத்தை படித்த பிறகே தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதனை படமாக எடுக்க முடிவு செய்ததாக கோபிநாத் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹசனா மாவட்டம் கோரூரு என்ற கிராமத்தில் பிறந்த கோபிநாத், இந்தியா பாகிஸ்தான் போரில் விமானப்படையில் பணியாற்றியவர்.

2003ல் அவர் உருவாக்கிய ஏர்டெக்கன் நிறுவனம் பற்றிய நிஜ கதையில் சூர்யா நாயகனாகவும், அபர்ணா பாலமுரளி ஆகியோரும் நடிக்கின்றனர். சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த கேப்டன் ஜி.ஆர் கோபிநாத், ‘சூரரைப்போற்று படம் அடுத்தாண்டு இந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.