சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஊழியர்கள் முகக் கவசம், கையுறை ஆகிய வற்றை கட்டாயம் அணிவதை உறுதி செய்யுமாறு ஏஜென்சி களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் அறி வுறுத்தி உள்ளன.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவ னங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. எரிவாயு ஏஜென்சி ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும்போது ஊழி யர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் அறிவுறுத்தி உள்ளன.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது: சமையல் எரிவாயு சிலிண்டர் களை விநியோகம் செய்யும் ஊழியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தால், அவர்களுக்கு எண்ணெய் நிறு வனங்கள் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்நிலையில், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகிய வற்றை அணியாமல் வருவதாக புகார்கள் வருகின்றன.
எனவே, ஊழியர்கள் முகக் கவசம், கையுறையை கட்டாயம் அணிவதுடன் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியை அடிக் கடி பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்யுமாறு அனைத்து ஏஜென்சிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.