கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த எஜமானர் இறந்தது தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 மாதமாக காத்திருக்கும் அவரது வளர்ப்பு நாய்..!
சீனாவின் ஊஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி உள்ளது.தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரேனாவால் இறந்த எஜமானருக்காக வளர்ப்பு நாய் 3 மாதமாக காத்திருக்கும் சோக சம்பவம் மனதை கலங்க வைத்துள்ளது.
கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த எஜமானர் இறந்தது தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 மாதமாக அவரது வளர்ப்பு நாய் காத்திருக்கிறது.சியாவ் பாவோ என்ற 7 வயதான அந்த வளர்ப்புநாயின் உரிமையாளர் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அந்த நாயும் அவருடன் கூடவே சென்றுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த 5 நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார்.ஆனால் சியாவ் பாவோ மட்டும் அவர் மீண்டும் வருவார் என்று மருத்துவமனை வாசலிலேயே காத்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை ஊழியர்கள் அந்த வளர்ப்புநாய்க்கு உணவளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த வளர்ப்புநாயை வேறு இடத்தில் கொண்டு விட்டப்போது அந்த நாய் மீண்டும் மருத்துவமனை வாசலுக்கு வந்துள்ளது.
இந்த சியாவ் பாவோ காத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த பலர் வளர்ப்புநாயின் பாசப்போராட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.