கொரோனா தொற்றால் முடி கொட்டுதலும் அறிகுறி..!
கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு நாளும் அறிவியலாளர்கள் புதிய தகவல்களை சேகரித்துக்கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தற்போது Indiana University School of Medicine நடத்திய ஆய்வில் தற்காலிக முடிகொட்டும் பிரச்னை உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இதுவரை காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு என 25 அறிகுறிகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது முடிக்கொட்டும் பிரச்னையும் உள்ளது.
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோருக்கு முடி கொட்டுவதும் இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் இது தற்காலிகம்தான் என மருத்துவக் குழு கூறியுள்ளது. இதற்குக் காரணம் உடல் வைரஸோடு எதிர்த்துப் போராடுவதால் இருக்கலாம். பயம், மனப்பதட்டம், ஹார்மோன் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் முடி கொட்டலாம், எனக் கூறியுள்ளனர். எனவே இதைக் கட்டுப்படுத்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல், ஆழ்ந்த உறக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர். இவற்றைக் கொரோனாவால் குணமடைந்த பின்னரும் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர்.