இந்தியாதகவல்கள்

உலகத்தின் பிரபலமான நாளிதழ்களின் ஒன்றான தி வாசிங்டன் போஸ்டின் பாராட்டை பெற்ற கேரள கம்யூனிஸ்ட் அரசு!

கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேரளாவை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. “கம்யூனிஸ்ட் அரசு எப்படி கோரோனோ பரவல் விளைவை  தட்டையாக்கியது எப்படி?” (How the communist state flattened its covid-19 curve?) என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி போடுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8500-ஐ கடந்துள்ளது. தமிழ் நாட்டில் நேற்று  106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் கேரளாவில் நேற்று  2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்தியாவில் முதன்முதலில் கேரள மாணவர்களுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தனர்.

கொரோனா வைரஸ் மற்ற அண்டைய மாநிலங்களில் பரவியதும் தங்கள் மாநில எல்லையை மூடினார் முதல்வர் பினராயி விஜயன். மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். எனினும் ஆரம்ப கட்டத்தில் அங்கு கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதாவது இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது கேரளா. இதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளால், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 2ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு கேரளா சென்றுவிட்டது அதிசயமே.

அறிகுறிகள் வைரஸ் பாதித்த பகுதியை மட்டுமல்லாமல் அனைத்து பகுதி மக்களையும் கேரளா அரசு தனிமைப்படுத்தியது. பின்னர் கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தாலும் அவர்களை சோதிப்பது என முடிவு செய்து செயல்பட்டது. 30,000 களப்பணியாளர்கள் வீடு வீடாக சோதனை போட்டனர்.

அரசில் தீவிர நடவடிக்கைகள்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடனே ரூ 20 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை கேரளா அரசு அறிவித்தது. சமூக விலகல் மக்கள் காய்கறிகள் வாங்கக் கூட கூட்டமாக வெளியே செல்லக் கூடாது என்பதற்காக ஸ்விக்கி மூலம் காய்கறிகளை வீடுகளுக்கே கொண்டு வரும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது.

பண தட்டுப்பாடு இன்மை

அது போல் பணத்தேவைகளுக்காக மக்கள் ஏடிஎம்களில் கூடுவதை தவிர்க்க, அஞ்சல் துறையுடன் இணைந்து பணத் தேவைப்படுவோருக்கு முன்பதிவிற்கு ஏற்ப அத்துறை ஊழியர்கள் வீட்டுக்கே பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அறவே கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும் கொரோனா கேரளாவில் இரண்டாவது நிலைக்கு வந்த போது கான்டாக்ட் டிரேசிங் முறையை கையிலெடுத்து மேலும் நோய் பரவாமல் தடுத்து பினராயி விஜயன் வெற்றிக் கண்டார்.

வெற்றியின் காரணம்

இப்படி, தீவிர சோதனைகள் மூலமாக கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தொடர் சிகிச்சை, ஊரடங்கினை பேணுவதற்கான சமூக உதவிகள் என அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதால், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும், உலக நாடுகளும் கேரள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி வருகின்றன.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.