கேரளா தங்கக்கடத்தல் ஸ்வப்னாவின் கூட்டாளி சரித்க்கு என்.ஐ.ஏ. காவல்…!
கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியே விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத், ஐக்கிய் அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆனால் ஃபைசல் பரீத் மட்டும் துபாயில் இருக்கிறார். கைது செய்வதற்காக துபாய் போலீசாரின் உதவியும், இன்டெர் போல் உதவியும் நாடப்பட்டுள்ளது. அவர் வேறு நாடுகளுக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக அவருடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.
இதனிடையே, ஸ்வப்னா, சந்தீப் நாயரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதியை நாடினர். அதனை விசாரித்த நீதிமன்றம் அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சரித் என்பவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரீத்தை 7 நாட்கள் காவலில் எடுத்டு விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.