வேலூர்: ”ஓட்டல்களில், பாதுகாப்பான முறையில் உணவு பரிமாறப்படும்,” என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு கூறினார்.இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் வரும், 8 முதல், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் ஓட்டல்கள் இயங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும், தலா மூன்று அடி இடைவெளிவிட்டு அமரும் வகையில், மேஜை வசதி செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம், கையுறை அணிந்து, முழு பாதுகாப்புடன் உணவு பரிமாறப்படும். ஓட்டலுக்கு வருவோரின் முகவரி, மொபைல் எண் பதிவு செய்யப்படும். முகக்கவசத்துடன் வருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து, சோப்பால் கை கழுவிய பிறகே, சாப்பிட அனுமதிக்கப்படுவர். சமையல் கூடங்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வரும் தொழிலாளர்கள், பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். தற்போது காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, மட்டும் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் அளவுக்கு, வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பதால், இரவு, 10:00 வரை ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
ஐயங்கார் ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி.
3 weeks முன்பு