இந்தியா

“என்னைப் புகழ வேண்டாம் பதிலாக வேண்டிக்கொள்ளுங்கள்!’ -ட்விட்டரில் கேட்டுக்கொண்ட தங்கல் புகழ் சைரா வாசிம்

2016ல் வெளிவந்த ஆமிர் கானின் தங்கல் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலரின் பாராட்டைப் பெற்றவர் சைரா வாசிம். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்பு Sky is Pink, Secret Super Star ஆகிய வெகுசில படங்களில் மட்டுமே நடித்த அவர், 2019ம் ஆண்டு திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார். சினிமா தன்னுடைய இறை நம்பிக்கைக்கு எதிராக இருப்பதால் இனி தான் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ட்விட்டரில் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளைப் பதிவிட்டு வரும் சைரா, நேற்று தன் ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அப்பதிவில், மக்கள்  என் மீது காட்டும் அன்பை மனத்தாழ்மையுடன் நான் ஏற்றுக்கொண்டாலும் , அவர்கள் என்னை பாராட்டுவது என் இறை நம்பிக்கைக்கு சோதனையாக அமைகிறது.

“மக்கள் என்மீது பொழிகிற அன்பை மனத்தாழ்மையுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் எனக்கு அளிக்கப்படும் இந்தப் பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவை எனக்கு ஒரு சோதனையாகவும், எனது இறை நம்பிக்கைக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்கிறது என்பதை என்னால் போதுமான அளவு வலியுறுத்திச் சொல்ல முடிவதில்லை.

பலருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் அளவுக்கு நான் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் சொல்கிறேன், என்னை எந்த வகையிலும் புகழ வேண்டாம். அதற்குப் பதிலாக அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள். என்னிடமுள்ள எண்ணற்ற குறைகளைப் போக்கவும், என் இதயத்தில் உள்ள வெற்றிடத்தை அவரின் கருணை ஒளியினால் நிறைக்கவும், என் இறை நம்பிக்கை அதிகமாகவும், என்னுடைய நோக்கங்களைச் சரியாக வைத்துக் கொள்ளவும், நன்மை பயக்கும் அறிவை அவர் அளிக்கவும், அவரை எப்போதும் அழைக்கும் இதயம் மற்றும் நாவினை நான் கொண்டிருக்கவும், அவர் பொருட்டு சரியான செயல்களைச் செய்யவும் உறுதியுடன் இஸ்லாமியராக வாழ்ந்து இஸ்லாமியராகவே நான் இறக்கவும் அனுமதிக்குமாறு எனக்காக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.” எனக் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.