மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மட்டும் 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தக நகரமான மும்பையில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,500 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் மற்றும் நாசிக்கில் மலேகான் டவுண் போன்ற பகுதிகளில் மே.31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இந்த நிலை நிலை குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு விளக்கம் அளிக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் 9,674 பேருடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 9,267பேருடன் குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமர் மோடி கூறியது போன்று அடுத்தகட்ட நடவடிக்கை மாநில முதவர்களிடம் பரிந்துரையின் படி நாடாகும் என சமீபத்தில் மக்களிடம் நடத்திய உரையாடலில் தெரிவித்தார்.