“ஈ.எம்.ஐ மீது வட்டி… சூட்-பூட்டுகளின் அரசு இது” – ராகுல் காந்தி
பெரிய வணிகங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அளித்துள்ள மத்திய அரசு, நடுத்தர வர்க்கத்தினருக்கு வட்டி தள்ளுபடி அளிக்காதது ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பெருந்தொற்று கால நடவடிக்கையாக, வங்கிக்கடன் தவணை தொகை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சலுகை பெற்றவர்களுக்கு தவணை தொகை மீது வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதைக் குறிப்பிட்டு பேசியிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பெரிய வணிகங்களுக்கு ரூ.1 லட்சத்து 45000 கோடி வரிச்சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால், மத்திய தர வர்க்கத்தினருக்கு கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்யாதது ஏன்? இது ஒரு SuitBoot அரசு என்று அவர் கூறியுள்ளார்.