தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்தனர்.
இந்த நிலையில் 2-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி வகுப்புகள் தொடங்கி உள்ளன.