இந்தி திணிப்பு – மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு.
திறன்வளர்ப்பு மற்றும் இந்தி பிரிவில் பணியாற்றும் பாலமுருகன் என்ற ஜிஎஸ்டி உதவி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.தற்போது இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் இந்தி, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்றும் விருப்பமில்லாத தம்மை இந்தி பிரிவில் பணியமர்த்தியுள்ளதாக பாலமுருகன் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் தனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.எனவே மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் ஹிந்தி பிரிவில் இந்தி எழுதப்படிக்கத் தெரிந்தவர்களை மட்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகனின் குற்றச்சாற்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.