இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6000 -த்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 919ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரத்து 872 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையுடன், தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர்.
#CoronaVirusUpdates: #COVID19 India Tracker
(As on 4th June, 2020, 08:00 AM)▶️ Confirmed cases: 216,919
▶️ Active cases: 106,737
▶️ Cured/Discharged/Migrated: 104,107
▶️ Deaths: 6,075#IndiaFightsCorona#StayHome #StaySafe @ICMRDELHIVia @MoHFW_INDIA pic.twitter.com/chWV5AyoTQ
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) June 4, 2020
இதனால், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 75ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.