நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்ற பெண்ணுடன் மொழி கற்கும் செல்போன் செயலி மூலம் நிரஞ்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.2017 தொடங்கிய இவர்களது காதல் கதை ,இதைத் தொடர்ந்து இருவருக்கும் அடுத்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்த இந்த ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கல்யாணத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்காக பிப்ரவரி 11-ம் தேதி மெக்ஸிகோவிலிருந்து டானா மற்றும் அவரது தாய் வந்தனர்.
மார்ச் 18-ம் தேதி அவருக்குத் திருமணம் நடைபெறவிருந்தது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நிரஞ்சன், டானா ஆகியோர் சந்தித்து மனு அளித்து திருமணம் செய்ய அனுமதியைப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் திறக்கப்பட்டு எங்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
இதுகுறித்து நிரஞ்சன் கூறும்போது,
வெவ்வேறு நேர மண்டலங்கள் இருப்பதால் கிட்டத்தட்ட முன்று ஆண்டுகளாக நீண்ட தூர உறவைப் பேணுவதற்கு எங்களுக்கு கடினமான இருந்தது.மெக்ஸிகோவை விட 13 மணிநேரம் முன்னதாக இந்திய தர நேரம் இருப்பதால், இருவரும் பேசிக்கொள்ளவே நேரம் கிடைக்காது.
திருமணம் முடிந்து நாங்கள் மெக்ஸிகோ செல்ல இருக்கிறோம்.என் பெற்றோர் நான் அங்கு சென்று டானா உடன் இருக்க சம்மதித்து விட்டனர்.இந்த லாக் டோவ்னால் டானா என் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிட முடிந்தது என கூறினார்.