வர்த்தகம்
ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறைந்தது..!
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் 86,449 கோடி ரூபாய், ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி வாயிலாக 15,000 கோடி ரூபாய், மாநில ஜி.எஸ்.டி வாயிலாக 21,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதத்தில், 87,422 கோடி ரூபாய் பெறப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் அதில் இருந்து ஒரு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 98 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.