அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து “விராட் கோலி”.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியைச் சோந்த கா்ப்பிணி யானை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அப்போது, சில விஷமிகள், அன்னாசி பழத்துக்குள் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனா். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்கு முயன்றபோது, அதிலிருந்த வெடிபொருள் வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலியால் துடித்த அந்த யானை, மக்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வெள்ளியாறில் தண்ணீரில் நின்றபடி கடந்த 27-ஆம் தேதி உயிா்விட்டது. அந்த யானை தண்ணீரில் நின்றபடி உயிா்விடும் புகைப்படம் தீவிரமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இச்சம்பவம் தொடா்பாக அதிா்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனா்.இந்தச் சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கூறியதாவது:
கேரளாவில் நடைபெற்ற சம்பவம் திகைக்க வைக்கிறது. விலங்குகள் மீது அன்பு செலுத்துவோம். கோழைத்தனமான இதுபோன்ற செயல்களுக்கு முடிவுகட்டுவோம் என்று கூறியுள்ளார்.