இந்தியா

அடேங்கப்பா, எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை…

நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. ஆனால் டீசல் விலை நேற்றைய விலையில் 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.50 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையின் இந்த விலையேற்றம் ஒட்டுமொத்தமாக விலைவாசி உயர்வுக்கு வழி செய்வதாக உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.