ஃபெலுடா என்றால் என்ன?
கொரோனா பரவல் இந்தியாவில் தொடக்க நிலையில் இருந்த போது, சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கவுன்சில் எளிய சோதனை முறையை கண்டறிந்தது. எளிமையாக கொரோனாவை உறுதி செய்யும் முறைக்கு ஃபெலுடா எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு இதனை வர்த்தக ரீதியாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. டாடா சி ஆர்ஐஎஸ்பி எனப்படும் இந்த சோதனை பிசிஆர் சோதனைகளின் துல்லியமான அளவை விரைவாகவும், குறைந்த செலவிலும் கண்டறிய வழி செய்கிறது.
கேஸ் 9 புரதத்தை பயன்படுத்தி கொரோனாவை கண்டறியும் முதல் சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இது பாதுகாப்பான, நம்பகமான, மலிவு விலையிலான இந்திய தயாரிப்பு என சிஎஸ்ஐஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.சிஆர்ஐஎஸ்பிஆர் எனப்படும் இந்த தொழில்நுட்பம் என்பது நோய்களை கண்டறிய பயன்படும் மரபணு எடிட்டிங் தொழில்நுட்பமாகும். தற்போதைய பிசிஆர் சோதனைக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருவிகள் தேவைப்படுவதுடன், பரிசோதனைக்கு 4500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் ஃபெலுடா சோதனைக்கு 500 ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது முக்கியமான அம்சமாகும். கர்ப்ப பரிசோதனை ஸ்ட்ரிப்பை போல பயன்படுத்தத்தக்கது என்பதால் மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். FELUDA என்பது FNCAS9 Editor Linked Uniform Detection Assay என்ற தொழில்நுட்ப பெயரின் சுருக்கமாகும்.இந்த சோதனையை உருவாக்கிய Dr Debojyoti Chakraborty பிரபல வங்காள திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவின் ரசிகர் ஆவார். தான் சத்யஜித்ரேவின் தீவிர ரசிகர் என்றும், அவரின் புகழ்பெற்ற கதாபாத்திரமான ஃபெலுடா என்ற பெயரை பரிந்துரைத்தது தனது மனைவி என்றும் டெபோஜோதி சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள், தான் அளித்த தேநீரையும் வாங்கிக்கொள்ளாமல் தன்னை அவமதித்துவிட்டதாகவும், தான் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார்.