குஜராத் மாநிலத்தில் உள்ள காவி காம்போய் நகரில் அமைந்துள்ள 150 ஆண்டு பழமையான சிவன் கோயில் ஸ்டம்பேஷ்வர் மகாதேவ் கோயில் ஆகும்.இது வதோதராவிலிருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இந்த கோவில் தனித்துவமான கோயிலாகும், இங்கு 24 மணி நேரத்தில் இரண்டு முறை கடல் நீர் கோயிலை மூழ்கடித்து விடும் . காரணம் அதிக மற்றும் குறைந்த அலை, இந்த நிகழ்வு தினசரி நடக்கிறது.
இங்குள்ள விசேஷமே இந்தப் சிவபெருமான் தினம் தினம் கடலில் மூழ்கி எழுவதுதான். கடல் அலைகள் ஏறுமுகமாக இருக்கும்போது அலைகள் சிறிது சிறிதாகக் கோயிலை மூழ்கடிக்கும். பிறகு கடல் நீர் காலையில் வடியத் தொடங்கும்போது ஆலயம் வெளியே காட்சி தரும். அமைதியையும் தனிமையையும் விரும்புவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வாங்கும் வரை இந்த கோயில் இருந்தது
யாருக்கும் தெரியாமல் இருந்தது. கடல் உள்வாங்கியதை அடுத்தே இந்த கோயில்
இருப்பது தெரிய வந்தது.
கங்கை, கடலில் கலக்கும் கங்கா சாகரில் பலமுறை குளிப்பதன் பலன் மஹீசாகரில்
ஒருமுறை குளித்தாலே கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர்
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வர லிங்கம் நான்கடி உயரம். விட்டம் இரண்டடி. இந்த லிங்கத்திற்கு 24 மணி நேரத்தில் இரு முறை ஏழு நதிகளும் அபிஷேகம் செய்வது சிறப்பு. பூஜை
நேரத்தில் கடல் வற்றி லிங்கம் முழுமையாக வெளிப்படும் அதிசயமும் நிகழ்கிறது.
அப்போது கடல் மட்டம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வர லிங்கத்தை அருகில் சென்று தரிசிக்க கரையிலிருந்து
பாலம் உள்ளது. காட்மண்ட் பசுபதிநாத் கோயில் பாணியில் கோபுரம் அமைந்துள்ளது.
ஆண்டின் சில நாட்களில் கோபுரத்தின் உயரத்திற்கு கடல் பொங்குகிறது. இந்த
ஆலயத்துக்கு வந்து இறைவனை தரிசிக்க, சிராவண அமாவாசை, சிவராத்திரி,
சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கோயிலுக்கு எதிரே உள்ள ஆசிரமம் ஒன்றில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளும், இலவச உணவும் வழங்கப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க இவ்வூரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள்
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதால் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது கவி-கம்போய்.
எல்லையற்ற வானமும், அகன்ற நீலக்கடலும், ஸ்தம்பேஸ்வர லிங்க வடிவில் பரம்பொருளும் கூடிய இத்தலத்தை பக்தர்கள் தரிசித்து பிறவிப் பயன் பெறலாம். கடலின் மேல் எழுந்தருளும் கருணையாளனை வழிபட்டால் இல்லத்தில் கடல் போல் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
முருகருக்கு ஏற்பட்ட திட்டை போக்க அவரால் கட்டப்பட்டதாக இந்த கோவில்பின் ஒரு கதை உள்ளது ,இதுவே பெரும்பாலோனரால் நம்பப்படுவதுமாகும். தமிழ் கடவுளாக பார்க்கப்படும் முருகரின் பேரில் குஜராத்தில் எப்படி ஒரு கோவில் இருப்பது ,தமிழரின் நீட புகழை நீடிக்க செய்து உள்ளது.