இந்தியாதகவல்கள்

தன் திருமணம்  நின்ற சோகத்தை மறந்து , மாணவிக்கு உதவி செய்த நல்லுள்ளம்!

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள காஜிம்பிராம் நகரில் வசித்துவருபவர் சுதேவ். இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடக்கவில்லை  என்று துன்பத்தில் இருந்தாலும் , பிறர் துன்பத்தை போக்கி மகிழ்ச்சி அடைந்துள்ளார் சுதேவ் .

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜென்மா என்ற மாணவி, குரூப் ஸ்டெடிக்காக கேரளா மாநிலம் குன்னம்குளத்தில் உள்ள அவரது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் ஊரடங்கு உத்தரவுப் போட வீடு திரும்ப முடியாமல் மாணவி ஜென்மா அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாக அவரைப் பார்க்க, ஜென்மாவை அவசரமாக  வீட்டுக்கு அழைத்து வரவேண்டி இருந்தது.

இதையடுத்து மாணவியின் தந்தை ஹேமதாஸ், திருச்சூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சோபா சுபின் உதவியைக் கோரியுள்ளார். அவர், சுதேவிடம் கேட்க, மறுக்காமல் அவரும், அவரது நண்பர்களும், திருமணம் நின்றுபோனதையும் பொருட்படுத்தாமல், அன்றைய தினமே குறிக்கப்பட்ட முகூர்த்த நேரமான 11 மணிக்கு கேரளாவில் இருந்து ஒரு வண்டியில் கிளம்பியுள்ளனர். பின்னர் மாலை 3 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சியில் கொண்டுவந்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சுதேவின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையடுத்து மாணவியின் தந்தை ஹேமதாஸ், திருச்சூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சோபா சுபின் உதவியைக் கோரியுள்ளார். அவர், சுதேவிடம் கேட்க, மறுக்காமல் அவரும், அவரது நண்பர்களும், திருமணம் நின்றுபோனதையும் பொருட்படுத்தாமல், அன்றைய தினமே குறிக்கப்பட்ட முகூர்த்த நேரமான 11 மணிக்கு கேரளாவில் இருந்து ஒரு வண்டியில் கிளம்பியுள்ளனர். பின்னர் மாலை 3 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சியில் ஜென்மாவை  கொண்டுவந்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சுதேவின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.