விடுமுறையை கழிக்கும் விக்னேஷ் – நயன்தாரா ஜோடி
நயன்தாரா தனது விடுமுறை நாட்களை விக்னேஷ் சிவனுடன் கோவாவில் கழித்து வருகிறார். இந்த ஜோடி தங்களது முதல் கோவிட் -19 விடுமுறையை இப்போது தான் தொடங்கியுள்ளது. மேலும் பயணத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது அழகான படங்களாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.கொரோனாவால் பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த நிலையில் கொச்சியில் ஓனம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணத்திற்கு செல்ல நயன்தாரா முடிவு செய்தார். நானும் ரவுடி தான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த சில நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்த ஜோடி அவ்வப்போது ஊர் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவர். இதனை பார்க்கும் அவரது ரசிகர்களும் எப்போது திருமணம்? விரைவில் செய்து கொள்ளுங்கள் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருவார்கள்.