பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் – முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிகளுக்கு அமைச்சர் வாழ்த்து!
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கான தரவரிசைப் பட்டியலை பார்த்து கொள்ளலாம்.மேலும் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த சஸ்மிதா என்ற மாணவி 199.67 மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையைச் சேர்ந்த மாணவி முதலிடமும், நீலகிரியை சேர்ந்த மாணவி மூன்றாம் இடமும் பிடித்ததற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி M.S. சஸ்மிதா & மூன்றாமிடம் பிடித்த நீலகிரி மாணவி R.காவ்யா ஆகியோருக்கு என் பாராட்டுகள். அந்த வாழ்த்து பதிவில் அவர் கூறியிருப்பதாவது, பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி M.S. சஸ்மிதா & மூன்றாமிடம் பிடித்த நீலகிரி மாணவி R.காவ்யா ஆகியோருக்கு என் பாராட்டுகள். தாங்கள் விரும்பிய பாடங்களை சிறப்பாக படித்து வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.