சினிமா

பிகில் படம் ரூ.20 கோடி நஷ்டமா? – தயாரிப்பாளர் பதில் தெரிவித்துள்ளார் !

பிகில் படம் ரூ.20 கோடி நஷ்டம் என்று வந்த செய்திக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி கூட்டணி அமைத்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, வெளிநாடுகள் என அனைத்து இடங்களிலும் வசூலை வாரிக்குவித்தது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் மாபெறும் வெற்றி அடைந்தது.பிகில் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து 2019 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் விஜய் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இந்நிலையில் பிகில் படம் ரூ.20 கோடி நஷ்டம் என்று நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து ரசிகர் ஒருவர் டிவிட்டரில், “பிகில் படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் என்று படத்தின் தயாரிப்பாளர் எந்த இடத்திலும் கூறவில்லை. இது ஒரு போலியான செய்தி” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “இது உண்மை தான் (நான் நஷ்டம் என்று சொல்லவில்லை) தயவு செய்து செய்தியின் உண்மையை தெறிந்துகொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.