‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
தினேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ, அடுத்ததாக ‘சூர்ப்பனகை’ என்ற படத்தை இயக்கி வந்தார். கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து குறைந்த குழுவினர் பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜூ. அக்கதை த்ரில்லர் ஜானரில் அமையவே ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா தயாரிப்பில் ரைசா நடிப்பில் படமாக்கி முடித்துள்ளார்.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் ‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் படப்பிடிப்பு நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ரத்தம் சொட்டச் சொட்ட மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார் படத்தின் ஹீரோயின் ரைசா.