ட்விட்டரின் அதிரடி..அமித் ஷாவின் டிஸ்பிளே பிக்சரை சிறிது நேரம் முடக்கிட்டாங்க..ஏன் தெரியுமா?
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் டிஸ்ப்ளே படத்தை, டுவிட்டர் சிறிது நேரம் முடக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமித் ஷாவின் டிஸ்பிளே பிக்சரை சிறிது நேரம் முடக்கி வைத்த டுவிட்டர்
அமித் ஷா டுவிட்டர் பக்கம்
புதுடெல்லி:
உள்துறை மந்திரி அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு புகைப்படத்தை (டிஸ்பிளே பிக்சர்) டுவிட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கி வைத்தது. யாரோ அந்த புகைப்படத்துக்கு உரிமை கொண்டாடியதாகவும், இதனால் டுவிட்டர் அவரது படத்தை காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கி வைத்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் சற்று நேரம் கழித்து அமித் ஷா புகைப்படம் டிஸ்பிளேயில் தென்படத் தொடங்கியது. இது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ‘கவனக்குறைவான பிழை காரணமாக, உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் கீழ் இந்த கணக்கை தற்காலிகமாக முடக்கியதாகவும், பின்னர் இந்த முடிவு உடனடியாக மாற்றப்பட்டு, டுவிட்டர் கணக்கு முழுமையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.