கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஆண்டு இறுதி தேர்வு இல்லாமல் பாஸ் செய்தற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார்.
ஒன்பதாவது மற்றும் பதினொறாவது படிக்கும் மாணவர்களை, இந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பருவ தேர்வுகள் முடிவுகளின் படி அடுத்த வகுப்புகளுக்கு பாஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பினர் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாடு முழுக்க சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் இந்தாண்டு ரத்தாகிறது. வட கிழக்கு டெல்லி பகுதி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடக்கும். வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர்” என அறிவிக்கப்பட்டுள்ளது