இரவு தூங்க செல்லும் முன் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இப்படி தினமும் குடித்து வந்தால் நிச்சயம் உடல் எடையை குறைக்கலாம்.கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும் இவை கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். மேலும் கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயிவிடும்.ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, மேலும் கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.
பசி எடுக்க கொள்ளு கஞ்சி செய்து குடிக்கவும்.கொள்ளை சாப்பிடுவதால் எலும்புகள், நரம்புகள் வலுப்பெறும்.மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கொள்ளும் அதனுடன் 1டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து,பின் அதை காய்ச்சி வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
ஏனெனில் கொள்ளில் அதிகளவு அயர்ன் சத்து உள்ளது.ஆரம்பிக்கும் போது கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். இது சூடு என்பதால் இதனை கவனித்து தொடரவும்.மிளகு, சீரகம் சேர்த்து ரசம் போல சாப்பிடலாம்.கொள்ளை அரைத்து பால் எடுத்து சூப் செய்து சாப்பிடலாம்.
கொள்ளில் வைட்டமின்கள், புரதசத்து, இரும்புச்சத்து, ஆகியவை இருப்பதால் தான் முன்னோர்கள் இந் மகத்துவ மருந்தை பயன்படுத்தியுள்ளனர்.இது ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. அதை சாப்பிடுவால் , சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கும்.