கிரெடிட் கார்டு பில் மொபைல் ஆப்ஸ் வழியாக செலுத்துகிறீர்களா?
ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றை கொண்டு பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு மொபைல் ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றின் மூலம் கிரெடிட் கார்டு பில்களை நாம் செலுத்த முடியும். ஆனால், உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க இந்த ஆப்ஸ்களை நம்ப வேண்டுமா? கட்டண பரிவர்த்தனையை முடிக்க உங்கள் வங்கி சேமிப்பு வங்கி கணக்கை ஆப்ஸ்களுடன் இணைப்பது பாதுகாப்பானதா? மொபைல் ஆப்ஸ்கள் வழியாக கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் முறை குறித்து புரிந்து கொள்வோம்.,CRED என்பது ஒரு மொபைல் ஆப் ஆகும். இதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த உங்களது அனைத்து கிரெடிட் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் நீங்கள் நெட் பேங்கிங் மூலம் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தலாம், UPI மூலமும், பிற செயலிகள் மூலமும் பணம் செலுத்தும் அம்சம் உள்ளது. 750 க்கும் அதிகமான கடன் மதிப்பெண்களை (கிரெடிட் ஸ்கோர்) கொண்ட நுகர்வோர் CREDல் சேரவும், பணம் செலுத்தவும் முடியும்.
CRED-ன் குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் அளவை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால் நீங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவீர்கள். மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனை வழங்கப்படும். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது உங்களுக்கு CRED ரிவார்டு நாணயங்கள் வழங்கப்படுகின்றன. பில்களில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு நாணயத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்.மேலும் இந்த நாணயங்களை பயன்படுத்தி பல்வேறு விதமான வெகுமதிகளை சேகரிக்கலாம். இந்த வெகுமதிகள் நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடிகள் பெற பயன்படும். மேலும் நீங்கள் சேகரிக்கும் நாணயங்களை பொறுத்து பணத்தை திரும்பப் பெறும் சலுகையான ‘கில் தி பில்’ பிரிவில் கேஷ் பேக்குகளும் வழங்கப்படும். இந்த கேஷ் பேக் பணம் நீங்கள் ஆப்ஸ்வுடன் இணைத்திருக்கும் வங்கி கணக்கிற்கே நேரடியாக சென்று விடும். பொதுவாக, 1000 CRED நாணயங்களைபெற்றால் உங்கள் கிரெடிட் கார்டில் ரூ.5 முதல் ரூ 10 வரை கேஷ்பேக் கிடைக்கும்.
Paytm பயன்பாடு அதன் தளத்தைப் பயன்படுத்தி ரூ.2,500 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில் தொகையை முதன் முதலாக செலுத்தும் நபருக்கு 1000 Paytm புள்ளிகளை வழங்குகிறது. இந்த புள்ளிகளை கொண்டு கேஷ்பேக் மற்றும் சலுகைகளை நீங்கள் பெறலாம். தேவைப்பட்டால் ஆப் மூலம் பில் செலுத்துதலுக்காக கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க முடியும். பரிவர்த்தனையை முடிக்க நீங்கள் கட்டண விவரங்களை உள்ளிட வேண்டும்.PhonePe -ல் கட்டணம் செலுத்தும்போது மற்ற ஆப்ஸ்களை போன்ற கிரெடிட் கார்டு விவரங்களை நீங்கள் சேமிக்க தேவையில்லை. நீங்கள் உங்களது நெட்வொர்க்கை (விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்கள் மற்றும் ரூபே) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் UPI ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். திகிலும் உங்களுக்கு புள்ளிகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்கள் உள்ளது.
கிரெடிட் கார்டு பில்களை மொபைல் ஆப்ஸ் வழியாக நீங்கள் செலுத்த விரும்பினால் அதில் இருக்கும் அபாயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தரவு திருட்டு பற்றி நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறீர்கள் என்றால் கிரெடிட் கார்டு பில்களை திருப்பிச் செலுத்த நெட் பேங்கிங், நெஃப்ட், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து தானாக செலுத்தும் வசதி போன்றவற்றை தேர்ந்தெடுத்து பணம் செலுத்துங்கள்.