தகவல்கள்

ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பீதி காரணமாக ஓடும் பேருந்தில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்துத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் அன்ஷிகா யாதவ், தனது தாயாருடன், டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அந்த பேருந்தில் பல பயணிகள் இருந்துள்ளனர்.

அப்போது, அந்த இளம் பெண் அன்ஷிகா யாதவிடம் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பின் அறிகுறிகள் சில அந்த பெண்ணிடம் காணப்பட்டதாக சக பயணிகள் சந்தேகம் அடைந்தனர். இது பற்றி, சக பயணிகள் அந்த இளம் பெண்ணிடமும், அந்த இளம் பெண்ணின் தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள், இந்த இளம் பெண் குறித்த தகவல் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சக பயணிகள் கூறி அவரை, பேருந்தை விட்டு வெளியே விரட்டும் படி வற்புறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் மீது ஒரு போர்வை போர்த்தி விட்டு, அந்த பெண்ணுடன் சிலர் மல்லுக்கட்டி உள்ளனர். அப்போது, அந்த இளம் பெண்ணின் தாயார், சக பயணிகளிடமும், அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும் கெஞ்சி உள்ளார். அத்துடன், “என் பெண்ணுக்கு ஒரு நோயும் இல்லை” என்று உறக்கச் சொல்லி விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த தாயாரின் எந்த வார்த்தைகளும் அங்கிருந்தவர்களின் காதுகளில் விழவே இல்லை.

பின்னர், யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து, கொஞ்சமும் இறக்கம் இல்லாமல் அந்த பெண்ணை தூக்கி, பேருந்தை விட்டு வெளியே வீசி உள்ளனர். இதில், அந்த பெண்ணிற்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண், பரிதாபமாக சாலையிலேயே உயிரிழந்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கு இது இயற்கையான மரணம் என்று கூறி, புகாரை போலீசார் பெற மறுத்துள்ளனர். மேலும், இந்த கொடூரச் செயலை செய்த குற்றவாளிகள் அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடங்கி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.