தொழில்தொழில்நுட்பம்

அமெரிக்கா அளவில் கலக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்… விஸ்வரூப வளர்ச்சி!

கோயம்புத்தூர்: திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் ரூ.35 கோடி ( 5 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்துள்ளது, சி.ஆர். ஐ. குழுமம் தனது வர்த்தகத்தை உலகளவில் விரிவுபடுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சி குறித்து சி.ஆர்.ஐ. குழுமத்தின் துணைத் தலைவர் திரு. G. சௌந்தரராஜன் அவர்கள் கூறியதாவது, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில், சி.ஆர்.ஐ. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பிராந்தியத்தில், விற்பனைக்கு பின் வழங்கக் கூடிய சேவைகளையும் நாம் டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும், புதிய தயாரிப்புகளை வழங்கவும் உறுதி செய்துள்ளோம். இதனால் அந்தப் பிராந்தியத்தில் நாம் வளர்ச்சியடைய நல்ல வாய்ப்புள்ளது. இந்தப் பகுதியில் நாம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகள் பின்வருமாறு: சுரங்கத் தேவைகளுக்கான பிரத்தியேக பம்புகள், ரசாயன செயல்முறைக்கான பம்புகள், பம்பின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் IoT (Internet of Things) உடன் கூடிய தொழிற்சாலைக்கான பம்புகள் ஆகியவை ஆகும். முக்கியமாக லைட்னிங் அரெஸ்ட்டர் பொருத்தப்பட்ட மோட்டார்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக சி.ஆர்.ஐ.யின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் உருவாக்கப்பட்டது, சி.ஆர்.ஐ. அமெரிக்கா சந்தைகளை குறித்து ஆராய்ச்சி செய்வதிலும், அமெரிக்கா மற்றும் கன்னடா சந்தைகளுக்கான அமெரிக்க சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கான NSF & CSA போன்ற சான்றிதழ்களை பெறுவதிலும் கணிசமான முதலீடு செய்துள்ளது.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் திரவ மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் சி.ஆர்.ஐ. முதன்மை வகிக்கிறது. சி.ஆர்.ஐ. பம்புகள், மோட்டார்கள், வால்வுகள், IoT டிரைவ்ஸ் & கண்ட்ரோலர்கள், பைப்புகள், வயர்ஸ் & கேபிள் மற்றும் சோலார் சிஸ்டம்ஸ் ஆகியவற்றையும் அளிக்கிறது. இக்குழுமம் 9000 வகையான பொருட்கள் மற்றும் உலகிலேயே ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய 100 சதவிகித ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்புகளை தயாரிக்கிறது. சி.ஆர்.ஐ.யின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் 120 நாடுகளில், 20,000 விற்பனையகங்கள் மற்றும் 1,500 சேவை மையங்கள் மூலம் விற்கப்படுகிறது. இந்நிறுவனம் 21 தயாரிப்பு மையங்களை உலகெங்கிலும் கொண்டுள்ளது. பிரிட்டன் மற்றும் இத்தாலியில் நிறுவனங்களை கொண்டுள்ளது.

இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு – ”ஃப்ளூடைன் அட்வான்சுடு டெக்னாலஜி மையம்” அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்றதாகும். சி.ஆர்.ஐ. இந்தியாவின் முதன்மை ஏற்றுமதியாளராக விளங்குகிறது. EEPC (Engineering Export Promotion Council) விருதை 14 முறையும், மின் சேமிப்புக்கான (NEC) விருதை 4 முறையும் பெற்றுள்ளது. சி.ஆர்.ஐ. ஃப்ளூயிட் சிஸ்டமின் தயாரிப்புகள் கீழ்வரும் பல்வகை துறைகளில் பயன்படுகிறது : கெமிக்கல் & பிரோசஸ், மின்சாரம், நீர் & கழிவுநீர், எண்ணெய் & வாயு, மருந்து, சக்கரை & சுத்திகரிப்பு, பேப்பர் & பல்ப், கடற்படை & பாதுகாப்பு, மெட்டல் & மைனிங், உணவு & பானங்கள், பெட்ரோகெமிக்கல் & ஃபைனரீஸ், சோலார், பில்டிங், HVAC, தீயணைப்பு, விவசாயம் மற்றும் குடியிருப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.