அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டால் சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்.வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சில வருடங்களுக்கு முன்பு , அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutrition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.இதனால் பல ஹோட்டல்களும் பழைய சாதத்தை தங்கள் மெனுவில் சேர்த்து வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் பழைய சாதத்திற்கு ஏன் கிடைத்தது என்று பார்க்கலாம்.
- பழைய சோறில் வேறெந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
- வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
- வனப்பைத் தரும், முதுமையை தடுக்கும் . நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க விரும்புவர்கள் தங்கள் காலை உணவுப்பட்டியலில் பழைய சோரை சேர்த்து கொள்ளலாம்.
- உடலில் உள்ள அணுச்சிதைவுகளைத் தடுக்கிறது.
- உடல் சோர்வைப் போக்குகிறது.
- உடல் சூட்டைத் தணிக்கிறது.
- ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
- வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
- உற்சாகமான மனநிலையைத் தருகிறது.இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
- தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
- ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
- வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு. என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்.
தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!