தமிழ்நாடு

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டு தேர்வுகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக் கூடிய வகையில் ஒரு மதிப்பெண் வினா கொண்டதாக கேள்விகள் இடம்பெறும். 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு அதாவது 80 சதவிகிதம் மட்டும் விடை அளித்தால் போதுமானது.இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பயிற்சி தேர்வு நடைபெறும். செப்டம்பர் 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.