இந்தியா பொருளாதாரம் மேலும் சரியும் – ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பின்னடைவைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பிறப்பிக்க தவறியிருந்தால் பொருளாதார சரிவு வரும் ஜனவரியில் உச்சத்தை எட்டியிருக்கும் என்றும், தற்போது அந்த சூழல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மைனஸ், 12 சதவீதமாக வீழ்ச்சி காணும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து, விருந்தோம்பல், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு ஜனவரி – மார்ச் காலங்களில் பொருளாதாரம் பின்னடைவில் இருந்து மீண்டு முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.